பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு பலியான இஸ்லாமிய குதிரை வீரன்!

சையத் அடில் ஹுசைன் ஷாவின் இறுதிச்சடங்கு
சையத் அடில் ஹுசைன் ஷாவின் இறுதிச்சடங்கு
Published on

சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்றுவதற்காக பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு, அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்லாமியரின் இறுதிச்சடங்கில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

காஷ்மீரின் பெல்காமைச் சேர்ந்தவர் சையத் அடில் ஹூசன். இவர் பெகல்காமிலிருந்து பைசாரன் பள்ளத்தாக்குக்கு சுற்றுலா வரும் பயணிகளைக் குதிரையில் ஏற்றிச் செல்லும் தொழில் செய்து வந்தார்.

இந்த நிலையில், பெல்காமில் நேற்று நடந்த தாக்குதலின்போது, இவர் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்றுவதற்காக பயங்கரவாதியிடமிருந்து துப்பாக்கியை பிடுங்க முயன்றிருக்கிறார். இதனால் கோபமடைந்த பயங்கரவாதிகள் அவரை சுட்டுக்கொன்றுள்ளனர்.

குதிரை சவாரி மூலம் கிடைத்த சொற்ப வருமானத்தில் தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார் சையத் அடில் ஹுசைன் ஷா.

“என் மகன் இல்லாமல் நாங்கள் என்ன செய்வோம் என தெரியவில்லை.” என மரணம் அடைந்த தனது மகன் குறித்து அவரது தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

சையத் அடில் ஹுசைன் ஷாவின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்ற நிலையில், நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com