‘ப்ளீஸ் நிறுத்துங்க…’ பொறுமையை இழந்த சமந்தா!

சமந்தா
சமந்தா
Published on

தன்னைச் சூழ்ந்த புகைப்படக்காரர்களிடம் நடிகை சமந்தா பொறுமை இழந்து, தயவு செய்து நிறுத்துங்கள் என்று கூறும் வீடியோ வைரலாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. நாக சைதன்யாவுடனான விவாகரத்து, மயோசிடிஸ் நோய் பாதிப்பு என கடந்த சில ஆண்டுகளாகவே சமந்தா நடிப்பில் பெரிதாக எந்தப் படமும் வெளியாகவில்லை.

ஆனாலும் தென்னிந்திய ரசிகர்களிடம் மிகுந்த செல்வாக்குள்ள நடிகையாகவே நீடிக்கிறார். முக்கியமாக, தமிழ் ரசிகர்கள் சமந்தாவை மீண்டும் தமிழ்ப் படங்களில் பார்க்க ஆர்வமாக இருக்கின்றனர். அண்மையில் வெளியான சுபம் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார்.

இந்த நிலையில், மும்பையில் உடற்பயிற்சி கூடத்திலிருந்து போன் பேசிக் கொண்டு வெளியே வந்த சமந்தாவைச் சூழ்ந்த புகைப்படக்காரர்கள் தொடர்ச்சியாக புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்தனர்.

இதனால், ஆத்திரமான சமந்தா அவர்களைப் பார்த்து, ‘தயவுசெய்து நிறுத்துங்கப்பா’ என்றவர், மீண்டும் உடற்பயிற்சி கூடத்துக்கே சென்றார். பேசி முடித்த பின்னர் வெளியே வந்தவர், கார் ஏறி சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே யூடியூப், பத்திரிகைத் துறையைச் சார்ந்த புகைப்படக்காரர்கள் பொதுவெளியில் தொந்தரவு செய்யும் விதமாக நடிகைகளைப் புகைப்படம் எடுத்து வருவது சர்ச்சையாகவே நீடிக்கிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com