முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று தனது 72ஆவது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். இதற்கிடையே, பிறந்தநாளையொட்டி அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை , முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற வாழ்த்துகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர், 'பூரண ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடனும், தமிழக மக்களுக்கு சேவை ஆற்றிட முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து' என கூறியுள்ளார்.

முதலமைச்சரின் பிறந்த நாள் முன்னிட்டு, தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com