மின்வெட்டு: ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் புகாருக்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு!

மின்வெட்டு: ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் புகாருக்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு!

மின்வெட்டு தொடர்பாக சினிமா ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் புகாருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.

சென்னையின் சாந்தோம் மற்றும் ஆழ்வார்பேட்டை பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினையும் டேக் செய்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 'இப்பிரச்னையை உடனடியாக கண்டறிந்து சரிசெய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன். நாங்கள் சென்னை நகரம் முழுவதும் உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறோம். அதனால் மின் விநியோகத்தில் சில இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. சிரமத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறோம்' என்று ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com