உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நடிகரும் இயக்குநருமான பிரபு தேவா இன்று நேரில் சந்தித்தார்.
தெலுங்கு திரைத்துறை முன்னணி நடிகரும் தயாரிப்பாளருமான மோகன் பாபு தயாரிப்பில் அவரது மகன் விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகியுள்ள கண்ணப்பா திரைப்படம் அடுத்த மாதம் இறுதியில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தில் நடிகர்கள் அக்ஷய் குமார், பிரபு தேவா, சரத் குமார் உட்படப் பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்த படக்குழுவினர் வாழ்த்துப் பெற்றனர்.
நடிகர் பிரபு தேவாவும் படக்குழுவினருடன் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். மேலும், அவரது அடுத்தப் படம் குறித்து முதல்வருடன் உரையாடினார்.
தொடர்ந்து, பிரபு தேவா, மோகன் பாபு உள்ளிட்டோருக்கு யோகி ஆதித்யநாத் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.