பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் ரெடி... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் ரெடி... ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Published on

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" திரைப்படம் செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி செட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் மலேசியா, சிங்கப்பூர் போன்ற பகுதிகளில் நடைபெற்றது. முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், இறுகட்ட பணிகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதையடுத்து கடந்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதையடுத்து இந்த படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில், 'எல்.ஐ.கே' படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. அதன்படி இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com