தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதிஷ் முகநூலில் பகிர்ந்த புகைப்படம் பேசு பொருளாகியுள்ளது.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக எந்த கூட்டணியில் இடம் பெரும் எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்தாலும், அடுத்த ஆண்டு ஜனவரிக்கு பிறகே அக்கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது உறுதியாகும். எனெனில் 9 ஜனவரி 2026 இல் கடலூரில் நடைபெற இருக்கும் மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதிஷ்மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இருப்பது போன்ற படத்தை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை சிங்கப்பெண் என்று அழைப்பர்; அவரை ரோல்மாடலாக கொண்ட பிரேமலதாவை தற்போது சிங்கப்பெண் என்று அழைக்கின்றனர்" என்று விளக்கம் அளித்துள்ளார்.