கும்பமேளாவில் புனித நீராடினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு!

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
Published on

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று கும்பமேளாவில் புனித நீராடினார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதுவரை 43 கோடி பேர் புனித நீராடியதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடி கடந்த 5ஆம் தேதி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். அமித்ஷா உட்பட மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் பிரபலங்களும் புனித நீராடி உள்ளனர்.

இந்நிலையில், கும்பமேளாவில் புனித நீராடுவதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரயாக்ராஜ் நகர் வந்தார். அவரை ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து, திரிவேணி சங்கமம் வந்த அவர், அங்கிருந்த பறவைகளுக்கு உணவு வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com