அறம், டோரா படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் நாயகனாக அறிமுகம்… ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அறம், டோரா படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் நாயகனாக அறிமுகம்… ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
Published on

தயாரிப்பாளர் ராஜேஷ் நாயகனாக நடித்து வந்த படத்துக்கு ‘அங்கீகாரம்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

கே.ஜி.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் ‘அறம்’, ‘டோரா’, ‘ஹீரோ’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் ராஜேஷ். பின்பு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தயாரிப்பில் இருந்து விலகியிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு உடலமைப்பை முழுமையாக மாற்றி நாயகனாக நடிக்கத் தொடங்கினார்.

தற்போது ராஜேஷ் நாயகனாக நடித்துள்ள படத்துக்கு ‘அங்கீகாரம்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு இப்படம் உருவாகி இருக்கிறது.

ராஜேஷ் உடன் இணைந்து சிந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜே.பி. தென்பதியான் இயக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாந்த் - அஜித்பாஸ்கர் - அருண்முருகன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

‘அங்கீகாரம்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com