காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தை நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், “ பெகல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் உலுக்கிவிட்டது. இதைப் போன்ற நெருக்கடியான தருணங்களில் இந்தியாவே பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்கும் என்பதைக் காட்டியாக வேண்டும். இதற்காக, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. அப்படிக் கூட்டும்போது மக்கள் பிரதிநிதிகள் தங்கள் ஒற்றுமையையும் தீர்மானத்தையும் உறுதியாக வெளிப்படுத்த முடியும். எனவே, ஆக விரைவில் இந்தக் கூட்டத்தைக் கூட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று இராகுல் காந்தி தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரன் ரிஜிஜுவுக்கு எழுதிய கடிதத்தில், இதே கோரிக்கையை வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.