மாநிலங்களவை தேர்தலுக்காக திமுக, அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூலை 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் திமுக சார்பில் வேட்பாளர்களாக மூத்த வழக்கறிஞர் வில்சன், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா, கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதிமுக சார்பில், மூத்த வழக்கறிஞர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக அவைத்தலைவர் தனபால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்
இந்தநிலையில், திமுக வேட்பாளர்கள் இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதேபோல், அதிமுக வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அதிமுகவினர் வேட்புமனுக்களை தாக்கல் செய்யும்போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் உடன் இருந்தார். மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கேபி.முனுசாமி ஆகியோரும் உடன் இருந்தனர்.
வேட்புமனு மீதான பரிசீலனை ஜூன் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.