முன்னணி நடிகை தமன்னா - விஜய் வர்மா காதலித்து வந்த நிலையில், தற்போது அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
தமன்னாவும் விஜய் வர்மாவும் கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்து காதலித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, 2023ஆம் ஆண்டு லஸ்ட் ஸ்டோரி வெப்தொடர் மூலம் இருவரும் இணைந்து நடித்தனர். அதன் பிறகும் விஜய் வர்மாவும், தமன்னாவும் காதலை உறுதி செய்யாமல் இருந்து வந்தார்கள். இருப்பினும் ஜோடியாக சினிமா நிகழ்ச்சிகள், பிரபலங்களின் வீட்டு பார்ட்டிகளுக்கு சென்றார்கள். இது காதலா இல்லையா என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர்.
ஆனால், ஒருகட்டத்தில் நேர்காணல்களில் கலந்துகொண்ட அவர்கள் தங்களது காதலை ஒப்புக்கொண்டார்கள். ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமன்னாவும், விஜய் வர்மாவும் பிரிந்துவிட்டார்கள் என்ற செய்திகள் வெளியாகியன. இதைத் தொடர்ந்து, ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை இருவரும் தங்களின் சமூக ஊடகத்திலிருந்து நீக்கயுள்ளனர். இது மேலும் சந்தேகத்தை உறுதிப்படுத்த, இருவருக்கும் நெருக்கமான ஒருவர் பிரிவு செய்தியை உறுதி செய்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
மேலும், இவர்கள் இருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு வந்துள்ளது. இதனாலேயே இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், இரண்டு தரப்பிலிருந்தும் இதுதொடர்பாக மறுப்பு தெரிவிக்காததால், ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.