காஞ்சிபுரத்தில் உள்ள *த்துக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ. 120 கோடி ஒதுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
2025-26ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தால். இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரம்:
* காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை தரம் உயர்த்தி, உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை நோய் ஆதரவு சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை 800 படுக்கைகளுடன் கூடிய, தன்னாட்சி பெற்ற மையமாகச் செயல்படும் வகையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ. 120 கோடி நிதி ஒதுக்கப்படும்.
* மகளிர் பயன்பெறும் வகையில் அவர்களது வசிப்பிடங்களுக்கு அருகில் சென்று, நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம், முக்கிய புற்றுநோய்கள், இதயநோய்கள் ஆகியற்றை கண்டறிவதற்கான சோதனைகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்து ஆலோசனை வழங்குதல் ஆகிய பல்வேறு சேவைகளை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வழங்கிட ரூ. 40 கோடி ஒதுக்கப்படும்
* டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்துக்கு ரூ. 1,092 கோடி ஒதுக்கீடு
* முதலமைச்சர் மருத்துக் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ 1, 462 கோடி ஒதுக்கீடு
* அசர ஊர்தி சேவைகளுக்கு ரூ. 348 கோடி ஒதுக்கீடு.
மேற்குறிப்பிட்ட மேலும் சில திட்டங்களுடன் சேர்த்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 21,906 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.