ரஷ்ய விமான விபத்து: 50 பேர் பலி!

விமான விபத்து
விமான விபத்து
Published on

ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் சிறிய ரக பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 50 பேர் பலியாகினர்.

ரஷ்யாவின் கிழக்கு பதியில் 50 பேருடன் பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. சைபீரியாவை தளமாக கொண்ட அங்காரா என்ற விமான நிறுவனத்தால் இயக்கப்படும் அந்த விமானம் ஏ.என்.24 சீன எல்லையில் உள்ள அமுர் பிராந்தியத்தின் டிண்டா நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்துடனான தொடர்பு துண்டானதாகக் கூறப்படுகிறது. உடனே விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்தது. அப்போது அமுர் பிராந்தியத்தில் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது தெரியவந்தது.

அந்த பகுதியில் விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விமானத்திலிருந்தவர்களின் கதி என்ன என்பது குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்த விமானத்தில், 5 குழந்தைகள் உள்பட 43 பயணிகளும், 6 விமானப் பணியாளர்களும் பயணித்திருந்த நிலையில், அதில் 50 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான விழுந்து நொறுங்கிய இடம் மலை பகுதி என்பதால், அங்கு மீட்பு ஹெலிகாப்டர் தரையிறங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com