தயாரிப்பாளர் ஐசரி மகள் திருமண விழாவில் நடிகர் ரவி மோகனும் பாடகி கெனிஷாவும் ஒரே நிற உடையில், ஒரே ஷோபாவில் அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரலாகி உள்ளது.
ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தாவுக்கும் லஷ்வின் குமார் என்பவருக்கும் திருமணம் இன்று நடைபெற்றது. தமிழ் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என இந்த திருமணத்தில் பலர் பங்கேற்றுள்ளனர்.
இயக்குநர் மணிரத்னம், நடிகர் பிரபு, விக்ரம் பிரபு, ரவி மோகன், பாடகி கெனிஷா, அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் இந்த திருமண விழாவில் பங்கேற்ற நிலையில், அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. ரவி மோகனுடன் அருகே இருக்கும் பெண் யார் என பலரும் கேள்வி எழுப்ப? அவர் வேறு யாருமில்லை.. பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் தான் என்பது வெளிச்சமாகியுள்ளது.
ரவி மோகன் - பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் இருவரும் சந்தனக் கலர் உடையை அணிந்து கொண்டு ஒரே சோபாவில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. இருவருக்கும் இடையே சம்பந்தம் இல்லை என்பது போல கூறப்பட்ட நிலையில், இருவரும் ஒரே நிற ஆடையில், புது ஜோடி போல திருமணத்துக்கு வந்திருப்பது சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.