விஞ்ஞானி நெல்லை சு. முத்து காலமானார்!

நெல்லை சு.முத்து
நெல்லை சு.முத்து
Published on

முன்னாள் விண்வெளி விஞ்ஞானி நெல்லை சு. முத்து திருவனந்தபுரத்தில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 74.

திருநெல்வேலியைச் சேர்ந்த சு. முத்து ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம் அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர்.

நெல்லையில் கடந்த 1951 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி பிறந்தவர். அறிவியல், சிறுவர் இலக்கியம், கவிதை, வரலாறு என 70க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். இவரின் 4 புத்தகங்களுக்கு தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

தினமணி நாளிதழில் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ள இவர், காக்கைச் சிறகினிலே இதழில் இரும்பின் தொன்மை குறித்து தொடர் ஒன்று எழுதி வருகிறார்.

இந்த நிலையில், அவர் இறப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரின் மறைவுக்கு பலரும் இரங்கள் தெரிவித்து வருகிறனர்.

அவரது உடல் திருவனந்தபுரத்தில் இருந்து, மதுரையில் உள்ள அவரது மகள் டாக்டர் கலைவாணி இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு மதுரையில் இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com