கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர் அருகே பெரியதாழையில் பனைமரம் ஏறி கள் இறக்கும் போராட்டத்தில் சீமான் ஈடுபட்டார்.
அப்போது கள் இறக்க தேவையான பொருட்களுடன் பனை மரத்தில் சீமான் ஏறினார். சீமான் மரம் ஏறுவதற்கு வசதியாக பனை மரத்தில் ஏணிபோல் கட்டைகளை வைத்து கட்டியிருந்தனர்.
தொடர்ந்து, பனைமரத்தில் இருந்து கள்ளை இறக்கிய சீமான் அதனை பருகினார்.
சீமானுடன் பனையேறும் தொழிலாளர்களும் பங்கேற்றனர். தமிழகத்தில் கள் இறக்க 33 ஆண்டுகளாக விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. சீமான் இந்த போராட்டம் சமூக ஊடகத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. அவர் சமூகத்தை பின்நோக்கியி இழுப்பதாக சிலரும், அவர் மரபை மீட்டெடுக்கிறார் என சிலரும் தங்களின் வாதத்தை முன் வைத்து வருகின்றனர்.