எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

செப். 4இல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி மதுரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வருகின்ற 4.9.2023 - திங்கட் கிழமை காலை 9.30 மணிக்கு, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதுரையில் 20.8.2023 அன்று நடைபெற்ற கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறப்புடன் நடத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த பல்வேறு மாநாட்டுக் குழுவினர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கண்ட பொறுப்புகளில் இருக்கும் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் எப்படி நடைபெறுகிறது, ஏற்கெனவே கொடுக்கப்பட்ட பூத் கமிட்டிப் பணிகள் முடிக்கப்பட்டதா இல்லையா என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி மாவட்டச் செயலாளர்களிடமிருந்து கேட்டுப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com