பாலியல் புகார்: ஐ.பி.எஸ். அதிகாரி பணியிடை நீக்கம்!

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி மகேஷ் குமார்
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி மகேஷ் குமார்
Published on

பெண் காவலர் அளித்த பாலியல் புகார் அடிப்படையில், சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாநகர போலீஸ் போக்குவரத்து பிரிவில் வடக்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றி வருபவர் மகேஷ் குமார். ஐ.பி.எஸ். அதிகாரி. இவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவர் டி.ஜி.பி.யிடம் புகார் அளித்தார்.

அதனடிப்படையில், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி சீமா அகர்வால் தலைமையிலான விசாகா குழு விசாரணை நடத்தியது. இந்தக் குழு விசாரணையில், புகாரில் அடிப்படை முகாந்திரம் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து ஐ.பி.எஸ். அதிகாரி மகேஷ் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com