ஷாலினி தயாரிப்பாளர்… அஜித்துக்கு விஜய் சொன்ன அட்வைஸ்

ஷாலினி தயாரிப்பாளர்… அஜித்துக்கு விஜய் சொன்ன அட்வைஸ்
Published on

’ரேஸ் காரை கொஞ்சகாலத்துக்கு ஒரு ஓரமா பார்க் பண்ணிட்டு அடுத்த சூப்பர் ஸ்டார் நீதான்னு நிரூபிக்க வா நண்பா’ என்று அஜித்துக்கு விஜய் கொடுத்த அழைப்பால் மிகமிக உற்சாகமாக தனது அடுத்த படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டார் அஜித்.

2025ல் வெளியான ‘குட் பேட் அக்லி’க்குப் பின்னர் அஜித் வேறு எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. கார் ரேஸில் அவர் காட்டிய ஆர்வக்கோளாறு ஒருபுறமிருக்க, அடுத்த படத்துக்கு அஜித் கேட்ட 200 கோடி ரூபாய் சம்பளத்தைக் கொடுக்க தயாரிப்பாளர்கள் யாரும் தயாராக இல்லை. எனவே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அஜித்தின் கார் ரேஸ் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியானதே தவிர புதுப்பட அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தனது மனைவி ஷாலினி பெயரில் தானே ஒரு தயாரிப்பு நிறுவனம் துவங்கி, ஆகஸ்ட் முதல் வாரம் முதல் அஜித் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார் என்கிற உறுதியான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இயக்குநர் சாட்சாத் அதே குட்பேட்காரர்தான்.

இதில் ஒரு ஆச்சர்யமான செய்தி, அஜித்தை இந்த மனநிலைக்குக் கொண்டுவந்தவரே நண்பன் விஜய்தானாம். பொதுவாகவே இருவரும் அடிக்கடி பேசிக்கொள்கிறவர்கள் தான் என்றாலும் விஜய்யின் அரசியல் என்ட்ரிக்குப் பின்னர் இருவரும் வாரம் இருமுறையாவது மணிக்கணக்கில் பல சப்ஜெக்ட்கள் குறித்து பேசிக்கொள்கிறார்களாம்.

அப்படி சமீபத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அஜித் அடுத்த படம் நடிப்பது தாமதமாவது பற்றி வருத்தப்பட்ட விஜய், ‘ தயாரிப்பாளர் யாருக்காகவும் காத்திருக்கவேண்டாம். என் தரப்பில் என்ன சப்போர்ட் வேண்டுமானாலும் செய்கிறேன். சகோதரி ஷாலினியை தயாரிப்பாளராக்கி உடனே படத்தைத் துவங்குங்க.

அரசியல்ல ரொம்ப நாளா உச்சத்துல இருந்தவங்களை நான் காலி பண்ணிட்டேன். சினிமாவுல அதை உங்களாலதான் செய்ய முடியும். உங்களுக்கு அந்த பெரிய இடம் வெயிட்டிங்கில் இருக்கு’ என்று உசுப்பேத்தவும் செய்தாராம்.

யாரை டார்கெட் பண்றாங்கன்னு புரியுதா பாஸ் ?

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com