சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,360-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடித்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக 1,241 உயர்ந்த தங்கம், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து மீண்டும் ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை நெருங்குவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தங்கம் விலை இந்த வாரம் தொடக்கத்தில் குறைந்துவந்த நிலையில், புதன்கிழமை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.72,160-க்கு விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.72,800-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ரூ.74,360-க்கும் விற்பனையாகிறது. அதன்படி, கடந்த 3 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,840 உயர்ந்துள்ளது.
அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் புதிய அறிவிப்புகளின் எதிரொலியால் சா்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களின் தாக்கமே தங்கம் விலை ஏற்றத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.10 உயர்ந்து ரூ.120-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,100 அதிகரித்து ரூ.1,20,000-க்கும் விற்பனையாகிறது.
அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp