தியேட்டரில் வெளியாவதற்கு முன்னரே இணையத்தில் வெளியான சிக்கந்தர்!

சல்மான் கான்
சல்மான் கான்
Published on

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்துள்ள சிக்கந்தர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியான நிலையில், சிக்கந்தர் திரைப்படம் இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

சல்மான் கான் நடித்திருக்கும் சிக்கந்தர் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றாலும் படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். ஏனெனில், பிரம்மாண்ட பொருள்செலவில் உருவாகியுள்ள இப்படம் நேற்று இரவே பைரஸி தளத்தில் லீக் ஆகியுள்ளது. இது முதல் முறை அல்ல கபாலி, ஆர்ஆர்ஆர், டாக்டர், துருவ் விக்ரம் நடித்த ஆதித்யா வர்மா உள்ளிட்ட பல படங்கள் இதே பிரச்னையை சந்தித்தன.

இந்தி கஜினி படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் பிரம்மாண்ட படம் சிக்கந்தர். முன்னதாக மெளனகுரு படத்தினை இந்தியில் சோனாக்சி சின்ஹாவை வைத்து ரீமேக் செய்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அதேபோல், சல்மான் கான் கடைசியாக நடித்த படம் டைகர் 3 அப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. படமும் வந்த ஒரே வாரத்தில் தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டது. இதனால், சிக்கந்தர் படம் அவருக்கு பெரிதும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com