ஸ்கைப் செயலிக்கு மூடுவிழா நடத்திய மைக்ரோசாஃப்ட்!

ஸ்கைப் செயலிக்கு மூடுவிழா நடத்திய மைக்ரோசாஃப்ட்!
Published on

வீடியோ கால் சேவையில் முன்னணி தளமாக திகழ்ந்த ஸ்கைப்பை இன்றுடன் நிறுத்திக் கொண்டது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.

வீடியோ அழைப்புகளுக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 'ஸ்கைப்' செயலியை கடந்த 2003 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அந்த காலகட்டத்தில் விடியோ அழைப்புகளுக்கு ஸ்கைப் செயலிதான் உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

21 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருக்கும் ஸ்கைப் செயலி சேவையை நிறுத்த கடந்த பிப்ரவரி மாதமே மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி மே 5 ஆம் தேதி ஸ்கைப் செயலி சேவை நிறுத்தப்படும் என்று அறிவித்தது. அதன்படி இன்றுடன் ஸ்கைப் செயலியின் சேவை இன்றுடன் முடிவுக்கு வந்தது.

அதேபோல், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மற்றொரு செயலியான 'டீம்ஸ்' செயலியை பயனர்கள், ஸ்கைப்புக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். இதற்காக டீம்ஸ் சேவை புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்படுவதாகவும் மைக்ரோசாஃப்ட் கூறியுள்ளது.

ஸ்கைப் செயலியைப் பயன்படுத்திய பயனர்கள் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் மூலம் எந்தவித உள்நுழைவும் இல்லாமல் டீம்ஸ் செயலியைப் பயன்படுத்தலாம். அதாவது ஸ்கைப் ஐடியைப் பயன்படுத்தி உள்நுழையலாம்.

ஸ்கைப் செயலியில் உள்ள தொடர்புகள், சாட்கள் டீம்ஸ்-க்கு எளிதாக மாற்றிக்கொள்ளலாம். ஸ்கைப்பைவிட டீம்ஸ் செயலியில் மேலும் சில புதிய வசதிகள் இருப்பதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் போல கூகுள் மீட், ஸூம் ஆகிய செயலிகளின் மூலமாகவும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com