தென்மேற்குப் பருவ மழை தொடங்கியது! அடடா மழைடா கன மழைடா...

 தென்மேற்குப் பருவ மழை தொடங்கியது! அடடா மழைடா கன மழைடா...
Published on

வங்கக்கடலில் வரும் 27ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 28ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது.

கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை தமிழகத்தின் வழக்கமான மழைப்பதிவு 11செ.மீ ஆனால் பதிவானது 21 செ.மீ ஆக உள்ளது. இயல்பை விட 92 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஏழு இடங்களில் கன மழை பெய்துள்ளது.

இந்நிலையில் தென்காசி,கோவை,நீலகிரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும். மேலும் கோவை, நீலகிரி நாளையும் நாளை மறுநாளும் அதிக கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.

நெல்லை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும். நெல்லை,தென்காசி,கோவை, நீலகிரியில் இன்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கோவை , நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையிலும், அரபிக் கடலில் காற்றழுத்தம் இருப்பதாலும் தமிழகத்தில் தூத்துக்குடி, பாம்பனில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் உள்ள மற்ற துறைமுகங்களில் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com