அக்கா, தம்பி கிராண்ட்மாஸ்டர்கள்
அக்கா, தம்பி கிராண்ட்மாஸ்டர்கள்

கிராண்ட் மாஸ்டர் வைஷாலி- முதல்வர் சொன்ன வாழ்த்துச்செய்தி!

இந்தியாவின் மூன்றாம் பெண் கிராண்ட்மாஸ்டராகவும், தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டராகவும் தமிழ்நாட்டின் வைஷாலி சாதனை படைத்துள்ளார். இதையொட்டி அவருக்கு பல தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் கிராண்ட்மாஸ்டர் வைஷாலியைப் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், “ 2023-ஆம் ஆண்டு உங்களுக்கு மிகச் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. உங்கள் தம்பி பிரக்ஞானந்தாவுடன் இணைந்து கேண்டிடேட்ஸ் தொடருக்குத் தகுதி பெற்றதன் மூலம், அத்தொடருக்குத் தகுதி பெற்ற முதல் உடன்பிறந்தவர்கள் என்ற வரலாற்றைப் படைத்தீர்கள்.

அதற்கு மேலும் மணிமகுடமாகத் தற்போது நீங்கள் கிராண்ட்மாஸ்டர் ஆகி, முதல்முறையாக உடன்பிறந்தோர் இருவர் கிராண்ட்மாஸ்டராக இருக்கும் சாதனையைப் படைத்துள்ளீர்கள். உங்கள் சாதனைகளால் நாங்கள் மிகவும் பெருமைகொள்கிறோம்.

உங்களது தனிச்சிறப்பான பயணம் செஸ் ஆர்வம் கொண்ட பலருக்கும் ஊக்கமாக விளங்குகிறது. நமது தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றத்துக்கான அடையாளமாகத் திகழ்கிறது.” என்று பெருமிதத்துடனும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com