கபாடி
கபாடிபடம்- விக்கிப்பீடியா

கேலோ இந்தியா- டிச.12,13இல் தமிழகத்தில் தேர்வுப் போட்டிகள் அறிவிப்பு!

நாடாளவில் மைய அரசின் சார்பிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள்-2023 மூன்றாவது முறையாக தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது. மழை காரணமாக தள்ளிவைக்கப்பட்ட இந்தப் போட்டி, சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் அடுத்த மாதம் 19ஆம் தேதி முதல் 31ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இதில் சுமார் 5000 விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்வார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், தடகளம் (Athletics),

கால்பந்து (Football),

துப்பாக்கி சுடுதல் (Shooting),

வாள்வீச்சு (Fencing),

வாலிபால் (Volleyball),

பளு தூக்குதல் (Weightlifting),

ஸ்குவாஷ் (Squash),

வில்வித்தை (Archery),

ஜூடோ(Judo),

கட்கா(Gatka),

டேபிள் டென்னிஸ் (Table Tennis),

பேட்மிண்டன் (Badminton),

சைக்கிள் ஓட்டுதல் (Cycling),

கோ-கோ (Kho-Kho),

யோகாசனம் (Yogasana),

மல்யுத்தம் (Wrestling),

ஹாக்கி(Hockey),

நீச்சல் (Swimming),

ஜிம்னாஸ்டிக்ஸ்(Gymnastics), 

டென்னிஸ் (Tennis),

துப்பாக்கி சுடுதல் (Shooting),

களரிபயிற்று (Kalaripayattu),

மல்லக்கம்பு (Mallakhamb),

கூடைப்பந்து (Basketball),

தாங் தா(Thang Ta),

கபடி(Kabbadi),

சிலம்பம் (Silambam)ஆகியவை நடைபெறும். 

கூடைப்பந்து, கபடி, கோ-கோ, வாலிபால், ஹாக்கி மற்றும் கால்பந்து ஆகியவற்றிற்கான குழு விளையாட்டுகளில் தமிழ்நாட்டு அணியும் இடம்பெற உள்ளது.

தமிழ்நாட்டு அணிகளில் இடப்பெறுவதற்கான தேர்வுப் போட்டிகள் ஏற்கெனவே நடைபெற இருந்தநிலையில், மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டன. அவை வரும் 12, 13ஆகிய தேதிகளில் கீழ்காணும் விவரங்களின்படி நடத்தப்படவுள்ளன. 

1

கூடைப்பந்து

பெண்கள்

மாவட்ட விளையாட்டரங்கம், திருவண்ணாமலை

12.12.2023 காலை 7.00 மணி

ஆண்கள்

13.12.2023 -

காலை 7.00 மணி

2

கால்பந்து

பெண்கள்

மாவட்ட விளையாட்டரங்கம், திண்டுக்கல்

12.12.2023 -

காலை 7.00 மணி

 ஆண்கள்

12.12.2023 காலை 7.00 மணி & 13.12.2023 காலை 7.00 மணி

3

கபாடி

பெண்கள்

ஜவஹர்லால் நேரு உள்

ஆண்கள்

விளையாட்டரங்கம், சென்னை

 12.12.2023 காலை 7.00 மணி

ஆண்கள்

13.12.2023 காலை 7.00 மணி

4

கோ-கோ

பெண்கள்

அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி

12.12.2023 காலை 7.00 மணி

ஆண்கள்

13.12.2023 காலை 7.00 மணி

5

வாலிபால்

பெண்கள்

அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி

12.12.2023 காலை 7.00 மணி

ஆண்கள்

13.12.2023 காலை 7.00 மணி

6

ஹாக்கி

பெண்கள்

டாக்டர். எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கம், மதுரை

12.12.2023 காலை 7.00 மணி

ஆண்கள்

13.12.2023 காலை 7.00 மணி

பங்கேற்பதற்குத் தகுதிபெற, விளையாட்டு வீரர்கள் வயதுச் சரிபார்ப்பு செயல்முறைக்கு பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் இரண்டினைச் சமர்ப்பிக்க வேண்டும்.

 ●     ஆதார் அட்டை அல்லது பாஸ்போர்ட்

●     பள்ளிக் கல்விச் சான்றிதழ் (SSLC/10ஆம் வகுப்பு)

●     பிறப்புச் சான்றிதழ் (குறைந்தது 5 ஆண்டுகளுக்கு முன்பு, மாநகராட்சி அல்லது கிராம பஞ்சாயத்து மூலம் ஜனவரி 1, 2013 அன்று அல்லது அதற்கு முன் வழங்கப்பட்டது)” என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் கேட்டுக்கொண்டுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com