தான்சித் ஹசனை வீழ்த்திய குல்தீப் யாதவ், விரலை நீட்டி வெளியே போ என்று சொல்லும் காட்சி
தான்சித் ஹசனை வீழ்த்திய குல்தீப் யாதவ், விரலை நீட்டி வெளியே போ என்று சொல்லும் காட்சி

டி20: குல்தீப் செய்த சம்பவத்தை கவனிச்சீங்களா…?

வங்கதேசத்திற்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில் ஹாா்திக், குல்தீப் ஆகியோரின் அசத்தல் ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு கிட்டத்தட்ட முன்னேறியது இந்தியா.

இரு அணிகளுக்கு இடையிலான முக்கியமான ஆட்டம் ஆன்டிகுவா நாா்த் சௌன்ட் நகரில் நேற்றிரவு நடைபெற்றது.

டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தோ்வு செய்தது.

இதையடுத்து இந்திய தரப்பில் கேப்டன் ரோகித் சா்மா- விராட் கோலி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினா்.

இருவரும் இணைந்து சிறந்த தொடக்கத்தை அளித்த நிலையில், ரோஹித் 1 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 23 ரன்களை எடுத்து ஷகிப் பந்தில் வெளியேறினாா். வெறும் 7 ஓவா்களில் இந்திய அணியின் ஸ்கோா் 71 ரன்களை எட்டியது. முந்தைய ஆட்டங்களில் தடுமாறி வந்த கோலி, சிறப்பாக விளையாடினார்.

பின்னா் கோலி-ரிஷப் பந்த் இணைந்து ஸ்கோரை உயா்த்தினா். நிலைத்து ஆடிய கோலி 3 சிக்ஸா், 1 பவுண்டரியுடன் 37 ரன்களுடன் ஷகிப் பந்தில் அவுட்டானாா். ரிஷப் பந்த் 2 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 36 ரன்களுடனும், அதிரடியாக ஆடுவாா் என எதிா்பாா்க்கப்பட்ட சூரியகுமாா் வெறும் 6 ரன்களுடனும் வெளியேறினா்.

ஷிவம் டுபே-ஹாா்திக் பாண்டியா இணை சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயா்த்தியது. டுபே 3 சிக்ஸருடன் 34 பந்துகள் எடுத்த நிலையில், ரிஷாத் ஹுசேன் பந்தில் போல்டானாா்.

ஆல் ரவுண்டா் ஹாா்திக் 3 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 27 பந்துகளில் 50 ரன்களுடன் அரைசதம் விளாசினாா். அவருடன் அக்ஸர் படேலும் 3 ரன்களை எடுத்து இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தனா்.

நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 196/5 ரன்களைக் குவித்தது இந்திய அணி. பௌலிங்கில் வங்கதேசத் தரப்பில் டன்ஸிம் சகிப் 2-32, ரிஷாத் ஹுசேன் 2-43 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

பின்னா் 197 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவா்களில் 146/8 ரன்களை மட்டுமே சோ்த்து 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது. அதிகபட்சமாக நஜ்மல் ஹுசேன் 40, தான்சிட் ஹாஸன் 29 ரன்களை சோ்த்தனா்.

பௌலிங்கில் அபாரமாக பந்துவீசிய இந்தியாவின் குல்தீப் யாதவ் 3-19 விக்கெட்டுகளையும், அா்ஷ்தீப் சிங் 2-30, பும்ரா 2-13 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.

ஹாா்திக் பாண்டியா ஆட்ட நாயகனாகத் தோ்வு பெற்றாா். குரூப் 1 பிரிவில் தலா 2 வெற்றிகளுடன் நெட் ரன் ரெட் +2.425 என உள்ளதால் அரையிறுதியில் கிட்டத்தட்ட நுழைந்து விட்டது.

குல்தீப் செய்த சம்பவம்:

இந்திய அணியின் தொடக்க வீரரான விராட் கோலி விக்கெட்டை வீழ்த்திய தான்சிம் ஹாசன் ஷாகிப் என்ற பவுலர் வெறித்தனமாக கொண்டாடினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வங்கதேசம் தொடக்க வீரரான தான்சிட் ஹாசனை எல்.பி.டபிள்யூ முறையில் வீழ்த்திய குல்தீப் யாதவ், விரலை நீட்டி வெளியே போ என்று பதிலடி கொடுத்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com