மோடியை வாழ்த்திய பிரதமர்
மோடியை வாழ்த்திய பிரதமர்

பிரக்ஞானந்தாவைத் தட்டிக்கொடுத்த பிரதமர் மோடி!

உலகக் கோப்பை சதுரங்கப் போட்டியில் இளம் செஸ் ஆட்டக்காரர் பிரக்ஞானந்தாவை, பிரதமர் மோடி நேரில் அழைத்துப் பாராட்டினார்.

அஜர்பைஜான் நாட்டில் கடந்த வாரம் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா நார்வே நாட்டின் கார்ல்சனை எதிர்கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றார். நாடுதிரும்பிய அவருக்கு சென்னை விமானநிலையத்தில்தமிழக அரசின் சார்பில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோட்டையில் முதலமைச்சர் ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் நேரில் பாராட்டினர். மாநில அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 30 இலட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று பிரக்ஞானந்தாவையும் அவரின் பெற்றோரையும் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். பிரதமரின் இல்லத்தில் பிரக்கின் தாயார் நாகலட்சுமி, தந்தை ரமேஷ் பாபு இருவருடனும் பிரதமர் மோடி நேரம் எடுத்துப் பேசினார். பிரக்ஞானந்தாவிடம் போட்டி விவரங்களைக் கேட்டறிந்த பிரதமர், இன்னும் சாதனைகள் படைக்கவேண்டும் என தட்டிக்கொடுத்து வாழ்த்தினார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com