பத்தொன்பது வயதுக்கு உட்பட்டவருக்கான யு-19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் கோப்பை இறுதிப் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் இந்தியாவை வீழ்த்தியது.
19 வயதுக்கு உட்பட்டவருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டி இன்று எட்டாம் தேதி துபாயில் நடைபெற்றது. இதில் மோதிய இந்திய, வங்கதேச அணிகளில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் மட்டையைப் பிடித்த வங்கதேசம் 49.1 ஓவர்களில் 198 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை இழந்தது. இந்திய வீரர்கள் இதாஜித் சர்மா, ஹார்திக் ராஜ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கார்த்திகேயா, ஆயுஸ் ஆகியோர் தலா ஒரு விக்கட் எடுத்திருந்தனர்.
இரண்டாவதாக மட்டைக்களம் இறங்கிய இந்திய அணி, 199 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை எதிர்கொண்டது. வங்கதேச அணியின் பந்துவீச்சு தொடக்கம் முதலே கடுமையாக இருந்தது. இந்திய அணியின் தலைவர் முகமது ஆமான் 26 ஓட்டங்கள் எடுத்தார். அவரை அடுத்து ஹார்திக் ராஜ் 24 ஓட்டங்களும் கார்த்திகேயா 21 ஓட்டங்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
வேகமேகமாக ஆட்டம் தொடர இந்திய அணி 35.2 ஓவர்களிலேயே வங்கதேசத்தின் வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 139 ஓட்டங்களில் ஆட்டத்தை இழந்தது.
வங்கதேசம் 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று தொடர் வெற்றியாளர் பட்டத்தை வென்றது.