சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

3வது டி20: சூர்யகுமார் யாதவ் அதிரடியால் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இந்திய அணி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் இரு போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. நேற்று இரவு நடைபெற்ற 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஒவர் முடிவில் 159 ரன்களை எடுத்தது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அடுத்து, 160 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 83 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். திலக் வர்மா 49 ரன்கள் அடித்தார்.

நேற்றைய போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ், 4 சிக்சர்கள் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 100 சிக்சர்கள் அடித்த 3வது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இரு இடங்களில் ரோகித் சர்மா (182 சிக்சர்), விராட் கோலி (117 சிக்சர்) உள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com