பந்து தலையில் அடித்ததால் 52 வயது கிரிக்கெட் வீரர் பலி!

பந்து தலையில் அடித்ததால் 52 வயது கிரிக்கெட் வீரர் பலி!

மும்பையில் உள்ள தட்கார் கிரிக்கெட் மைதானத்தில் பந்து தலையில் அடித்ததால் 52 வயதான நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள தட்கார் மைதானத்தில் நேற்று முன்தினம் இரண்டு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் ஒரு போட்டியில் விளையாடிய ஜயேஷ் சுனிலை சாவ்லா பீல்டிங்க் செய்துள்ளார். அப்போது, மற்றொரு கிரிக்கெட் போட்டியில் அடிக்கப்பட்ட பந்து இவரது பின் தலையில் பலமாக வந்து அடித்துள்ளது. அந்த இடத்திலேயே மயக்கமடைந்து கீழே விழுந்த சுனிலை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். தலையில் ஏற்பட்ட பலத்த அடியால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குச்சி விசா ஓஸ்வால் விகாஸ் லெஜண்ட் கோப்பை இருபது ஓவர் போட்டியாகும். இது 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் விளையாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com