விம்பிள்டன் டென்னிஸ்: பதக்கம் வென்ற இளம் புயல்!

கார்லஸ் அல்காரஸ்
கார்லஸ் அல்காரஸ்
Published on

விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி இளம் வீரர் கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

லண்டனில் நடந்த விம்பிள்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், நடப்புச் சாம்பியனான 21 வயது அல்கராஸ், ஏழு முறை விம்பிள்டன் சாம்பியனும், வரலாற்றில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான 37 வயதான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் உடன் மோதினார். வலது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து ஐந்து வாரங்களுக்குப் பிறகு கலந்து கொண்ட ஜோகோவிச்சுக்கு, இளம்புயல் அல்கராஸ் பெரும் சவாலாக களமாடினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் அல்கராஸ் 6 - 2, 6 - 2, 7 – 6 (7/4) என்ற நேர் செட்களில், ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

கடந்த ஆண்டும் இதே இருவர் மோதிய நிலையில், கார்லஸ் அல்காரஸ் தனது முதல் விம்பிள்டன் பட்டத்தை வென்று ஜோகோவிச்சை அதிர்ச்சியடைய வைத்தது குறிப்பிடத்தக்கது.

இளம் வீரரான கார்லஸ் அல்காரஸ் வெல்லும் 4ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது. இதன் பரிசுத்தொகை, இந்திய மதிப்பில் சுமார் 28.62 கோடி ரூபாய். 24 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனையைத் தன்வசம் வைத்துள்ள ஜோக்கோவிச் இரண்டாவது முறையாக அல்காரஸிடம் சாம்பியன் பட்டத்தை இழந்துள்ளார்.

போட்டியை காண வந்த பிரிட்டன் இளவரசி கேட் மிட்டில்டன் சாம்பியனான அல்கராஸூக்கும் ரன்னர் அப்-ஆக வந்த ஜோகோவிச்சுக்கும் பரிசுகளை வழங்கி கெளரவித்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com