ஐஸ்வர் பிரதாப், ஸ்வப்னில் சரேஷ்,
ஐஸ்வர் பிரதாப், ஸ்வப்னில் சரேஷ்,

துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் மற்றும் வெள்ளி கிடைத்துள்ளது.

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்ஸு நகரில் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இன்றைய போட்டியில் ஆடவர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது.

ஐஸ்வர் பிரதாப், ஸ்வப்னில் சரேஷ், அகில் ஆகியோர் அடங்கிய அணி வெற்றி பெற்றுள்ளது.

அதுபோல, துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. ஈஷா சிங், பாலக், திவ்யா ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளி வென்றுள்ளது.

இத்துடன், துப்பாக்கிச் சுடுதலில் மட்டும் இந்தியாவுக்கு 5 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என 15 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 7 தங்கம் உள்ளிட்ட 27 பதக்கங்களைப் பெற்று 5 ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com