ரோகித் சர்மா - பாபர் அசாம்
ரோகித் சர்மா - பாபர் அசாம்

ஆசிய கோப்பை: 4 ஆண்டுகளுக்கு பிறகு மோதும் இந்தியா – பாகிஸ்தான்!

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் 238 ரன் வித்தியாசத்தில் நேபாளத்தையும், 2-வது லீக்கில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தையும் தோற்கடித்தது.

இந்த நிலையில் தொடரின் 3-வது லீக்கில் இந்தியாவும், பாகிஸ்தானும் கண்டி மாவட்டத்தில் உள்ள பல்லகெலே ஸ்டேடியத்தில் இன்று விளையாடுகின்றன.

ஒரு நாள் கிரிக்கெட்டில் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு அதாவது 4 ஆண்டுக்கு கழித்து இரு அணிகளும் மோதுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பல்லகெலேயில் இன்று மழை பெய்வதற்கு 84 சதவீதம் வாய்ப்புள்ளது. வானம் கருமேகம் சூழ்ந்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம்.

அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திரஜடேஜா, ஷர்துல் தாக்குர் அல்லது முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

பாகிஸ்தான்: பஹர் ஜமான், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், ஆஹா சல்மான், இப்திகர் அகமது, ஷதப் கான், முகமது நவாஸ், ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப்.

logo
Andhimazhai
www.andhimazhai.com