கே.எல்.ராகுலும் ஷ்ரேயாஸ் அய்யரும்
கே.எல்.ராகுலும் ஷ்ரேயாஸ் அய்யரும்

ஆசியக் கோப்பை: நான்காவது இடத்தில் களமிறங்கும் புதுமுகம்?

ஆசியக் கோப்பையில் பங்கேற்கும் 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ், திலக் வர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். புதுமுக வீரரான திலக் வர்மா இடம்பிடித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அணியில் நான்காவது ஆட்டக்காரராக யாரை இறக்குவது என்ற விவாதம் நடந்துவருகிறது. இடது கை ஆட்டக்காரரான திலக் வர்மா, மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் சிறப்பாக ஆடியதால் அவரை ஆசியக் கோப்பை அணியிலும் எடுக்கலாம் என்று பேசப்பட்டது. எனவே அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை விளையாட வைப்பார்களா எனத் தெரியவில்லை.

காயத்தால் 11 மாதங்கள் விளையாடாமல் இருந்த பும்ரா, அயர்லாந்து டி20 போட்டியில் கலந்துகொண்டு ஆடிய நிலையில் இந்த ஒரு நாள் போட்டி அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.

டி20 போட்டிகளில் ஜொலித்தாலும் 50 ஓவர் போட்டிகளில் சொதப்பும் சூரியகுமார் யாதவும் இந்த அணியில் இடம் பிடித்துள்ளார்.

கே எல் ராகுல் விக்கெட் கீப்பராக ஆடுகிறார்.

ஆறு அணிகள் களம் காணும் ஆசியக் கோப்பை ஒரு நாள் போட்டி, ஆகஸ்ட் 30-இல் தொடங்கி செப்டம்பர் 17-இல் நிறைவடைகிறது.

டெல்லியில் இன்று நடைபெற்ற தேர்வுக் குழு கூட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, ரோஹித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா(கேப்டன்), ஹர்திக் பாண்டியா(துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், சுப்மான் கில், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, திலக் வர்மா, இஷான் கிஷன், குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், அக்‌ஷர் படேல், பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். சஞ்சு சாம்சன் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com