மேலும் 6... காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்துவரும் இந்திய வீரர்கள்!

asmita dey
தங்கப் பதக்கம் வென்ற அஸ்மிதா
Published on

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ச்சியாகப் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.

ஜூடோ போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த அஸ்மிதா, மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான இவரின் தந்தை, கடந்த ஏழு மாதத்திற்கு முன்னர்தான் காலமானார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி வரலாற்றில் ஜூடோவில், நடப்பு ஆண்டில்தான் இந்தியா முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.

இதேபோல், ஆடவர் பிரிவில் ஹர்ஷ் சிங் தங்கப்பதக்கம் வென்று, காமன்வெல்த் போட்டியில், ஜூடோவில் தங்கம் வென்ற முதல் இந்திய ஆண் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

மேலும், மகளிர் 57 கிலோ பிரிவில் யாமினி மௌர்யா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா 85.83 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். இதேப் போட்டியில், இந்திய வீரர் யஷ்வீர் சிங் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5 தங்கம், 12 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் இந்தியா 10ஆவது இடத்தில் உள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com