மாரியப்பன்
மாரியப்பன்

தடகளப் போட்டி: தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு!

ஜப்பானில் நடைபெற்றுவரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், உயரம் தாண்டுதல் பிரிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஜப்பானில் உள்ள கோபி நகரில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுவருகிறது.

இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு (T63 பிரிவு) சீசனில் 1.88 மீட்டர் உயரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார்.

மாரியப்பன் தங்கம் வென்றதற்கு தமிழக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “ ஜப்பானின் கோபியில் நடைபெற்றுவரும் WorldPara Athletics Championships சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் தங்கம் வென்றுள்ளார்.” என்று பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com