மகளிர் டி20 - 7ஆம் முறையாக வாகைசூடிய ஆஸ்திரேலியா அணி!

Women's  t20 Worldcup
மகளிர் டி20 உலகக் கோப்பை
Published on

மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

இதன் மூலம் வரலாற்றில் 7-வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்று ஆஸ்திரேலியா அணி சாதனைப் புரிந்துள்ளது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது.

பின்னர் 151 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 17 பந்துகள் மீதமிருக்க 3 விக்கெட் இழப்புக்கு வெற்றி பெற்றது.

பெத் மூனி 64 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இவர், தொடரின் சிறந்த வீராங்கனையாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com