உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி; கம்மின்ஸ் தலைமை எப்படி இருக்கும்?

கம்மின்ஸ்
கம்மின்ஸ்
Published on

இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பைத் தொடருக்கான 18 பேர் கொண்ட உத்தேச அணியை ஆஸ்திரேலியா இன்று காலை அறிவித்துள்ளது.

இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர்19ஆம் தேதி வரை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணை ஜூன் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. இருப்பினும் சில போட்டிகள் மட்டும் தேதி மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உலகக்கோப்பைத் தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட உத்தேச அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அதில் நட்சத்திர வீரர் லபுஷேன் மட்டும் சேர்க்கப்படவில்லை. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியே இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்: கம்மின்ஸ் (கேப்டன்), அபாட், ஆஷ்டன் ஏகர், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் சிட்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா.

அணியில் இடம்பெற்றுள்ள ஆரோன் ஹார்டி, தன்வீர் சங்கா ஆகியோர் அனுபவமற்ற வீரர்களாக கருதப்படுகின்றனர். ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள கம்மின்ஸ், கடந்த 2022 -நவம்பரிலிருந்து எந்த ஒரு நாள் போட்டியிலும் விளையாடவில்லை. மணிக்கட்டு காயத்தால் அவதிப்பட்டு வரும் அவர், இந்த மாதம் இறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கம்மின்ஸ் இதுவரை இரண்டு போட்டிகளில் மட்டுமே ஆஸ்திரேலியா அணியை வழிநடத்தியுள்ளார்.

உலகக் கோப்பை தொடரில், ஆஸ்திரேலியா அணி முதல் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ள உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com