பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சகானாவை வாழ்த்தி, ஊக்கத்தொகை அறிவித்துள்ளார் முதலமைச்சர் விஜய்.
ஜப்பானின் ஐச்சி-நாகோயா நகரில் கடந்த 18ஆம் தேதி முதல் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வரும் 24ஆம் தேதிவரை இப்போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 45 நாடுகளைச் சேர்ந்த 3,000 மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கேற்கின்றனர்.
டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பெண்கள் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை பேபி சகானா ரவிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்துள்ளார்.