கால்நடை மருத்துவர்களுக்கான இறகுப் பந்து போட்டி!

இறகுப் பந்துப் போட்டி
இறகுப் பந்துப் போட்டி
Published on

தமிழ்நாடு கால்நடை மருத்துவர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான இறகுப் பந்துப் போட்டி நாளை (03-01-2026) தொடங்குகிறது. சென்னை வண்டலூரிலுள்ள தமிழ்நாட்டு விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் உள்ள இறகுப்பந்து உள்ளரங்கில் இந்த போட்டிகள் நடக்கின்றன. இப்போட்டி இரண்டு நாட்கள் நடைபெறும்.

போட்டிகளை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக  பொறுப்புதுணைவேந்தரும் பதிவாளருமான முனைவர் நரேந்திரபாபு தொடங்கி வைக்கிறார். மறுநாள் பரிசு வழங்கும் விழாவில் மருத்துவர் சி.பழனி, ஐஏஎஸ் கலந்துகொள்ள இருக்கிறார்.

இது நான்காவது ஆண்டு நடக்கும் போட்டி. இதற்கு முன்னதாக இப்போட்டிகள் கோவை, பெருந்துறை, தஞ்சை ஆகிய நகரங்களில் நடத்தப்பட்டன. கால்நடை மருத்துவப் பட்டதாரிகளுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படும் போட்டி இதுவாகும். இந்த ஆண்டு மட்டும் 86 குழுக்கள் இதில் பங்கேற்கப் பதிவு செய்துள்ளன. 23 வயதில் இருந்து 65 வயது நிரம்பிய மருத்துவர்கள் வரைகலந்துகொள்கின்றனர். இது இரு பாலினத்தவரும் கலந்துகொள்ளும் போட்டியாக நடத்தப்படுகிறது. ஆண்கள், பெண்களுக்கான இரட்டையர் போட்டி, கலப்பு இரட்டையர் போட்டி ஆகியவை இடம் பெறுகின்றன.

சென்னையில் நடக்கும் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை இந்நகரைச் சேர்ந்த கால்நடை மருத்துவ இறகுப் பந்து ஆர்வலர்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

இத்தகவல்களை தமிழ்நாடு கால்நடை மருத்துவர்கள் இறகுப்பந்து அமைப்பின் தலைவர் மருத்துவர் ருக்மாங்கதன் அவர்களும் பொதுச்செயலாளர் மருத்துவர் பழனி அவர்களும் தெரிவித்துள்ளனர். உடல்நலனைப் பேணுவதில் அக்கறை செலுத்தத் தூண்டுவதே நோக்கம் எனவும் அவர்கள் கூறினர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com