
நேற்று நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா பெல்ஜியம் அணியிடம் 1-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. இம்முறை உலகக்கோப்பையை கனடா, அமெரிக்கா,மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. அமெரிக்க அணியில் 3 கோல் போட்டு முன்னணியில் இருக்கும் வீரரான போலாரின் பலோகன் என்ற வீரருக்கு ஓர் ஆட்டத்தில் ஆட நடுவர்கள் சிவப்பு அட்டை கொடுத்து தடை விதித்தனர். முக்கியமான பெல்ஜியம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவரால் ஆட இயலாத நிலை.
அதெப்படி ட்ரம்ப் சும்மா இருப்பார்? அவர் சர்வதேச கால்பந்து சங்கமான பிபாவுக்குப் போன் போட்டு, எங்கள் ஆளுக்கு தண்டனையை ரத்து செய்யணும் என மிரட்ட, பிபா பணிந்தது. இப்படி ஒரு தலையீடு இதுவரை நடந்ததே இல்லை. பிபா இனி தன்னை நடுநிலையான சங்கம் என சொல்லிக்கவே முடியாது என ரசிகர்கள் இதை விமர்சித்த நிலையில் ஆட்டம் நடந்தது.
என்னதான் மிரட்டினாலும் மைதானத்தில் ஆடினால் தானே வெல்ல முடியும்? பெல்ஜியம், அமெரிக்க அணியை கொடூரமாக நசுக்கி வெளியே அனுப்பிவிட்டது!.