பிரிஜ் பூஷன் சிங்
பிரிஜ் பூஷன் சிங்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் ரத்து!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக உலக மல்யுத்த கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சர்ச்சையில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல. பாஜக எம்பியான பிரிஜ் பூஷன் சிங் அந்த கூட்டமைப்பின் தலைவராக 12ஆண்டுகள் இருந்தவர். அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாலியல் குற்றச்சாட்டு விவகாரமும் நீதிமன்றத்தின் தலையீடு காரணமாகவும் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றிருக்க வேண்டிய தேர்தல் இன்னும் நடைபெறாமல் உள்ளது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு 45 நாள்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும், இல்லையெனில் உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படும் என்று கடந்த மே 30 ஆம் தேதி உலக மல்யுத்த கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. இருந்தாலும் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்த நிலையிலேயே, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு குறிப்பிட்ட நேரத்தில் தேர்தல் நடத்தாததால் உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படுவதாக உலக மல்யுத்த கூட்டமைப்பு அறிவித்துள்ளது. உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டுள்ளதால், போட்டிகளில் பங்கேற்கும் இந்திய மல்யுத்த வீரர்கள் குறிப்பிட்ட நாடு என்று கூற முடியாத சூழல் உருவாகி உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com