வாஷிங்டன் சுந்தரைப் பாராட்டி, ரூ. 0.75 கோடி ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்!

கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர்
கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர்
Published on: 

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், கிரிக்கெட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை முதலமைச்சர் விஜய் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட தகவல்:

"ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய ஆடவர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தரின் சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 இலட்சம் வழங்கப்படும்.

அவரது வெற்றி இளைய தலைமுறையினருக்கு புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும். வாஷிங்டன் சுந்தர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்!" என்று கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com