செயின்ட் லூயிஸ் செஸ் போட்டி – பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் வாழ்த்து!

Praggnanandhaa
பிரக்ஞானந்தா
Published on

அமெரிக்காவில் நடைபெற்ற செயின்ட் லூயிஸ் ரேப்பிட்-பிளிட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

இந்தப் போட்டியில் இந்தியா, உஸ்பெகிஸ்தான், நெதர்லாந்து, ஜெர்மனி, அமெரிக்காவைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா இந்தியா சார்பில் பங்கேற்றார்.இறுதிச் சுற்றுக்கு முன்னரே மொத்த 35 புள்ளிகளில், 23.5 புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்ததால், முதலாவது செயின்ட் லூயிஸ் ரேப்பிட்-பிளிட்ஸ் செஸ் போட்டியின் சாம்பியனாக பிரக்ஞானந்தா அறிவிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட செய்தி:

“உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற இந்தத் தொடரில், பிரக்ஞானந்தா தன்னை விட அதிக ரேட்டிங் கொண்ட வீர்ர்களை எதிர்கொண்டு, வெற்றி வாகை சூடியுள்ளார்.

சர்வதேச செஸ் அரங்கில் தான் ஒரு சிறந்த சாம்பியன் என்பதை அவர் மீண்டும் ஒரு முறை நிரூபித்து, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

எலைட் திட்டத்தின்கீழ் பயன்பெறும் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு எனது பாராட்டுகள்.” என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com