பிரக்ஞானந்தாவின் அம்மாவுடன் ஐரின் சுகந்தர்
பிரக்ஞானந்தாவின் அம்மாவுடன் ஐரின் சுகந்தர்

உலகக் கோப்பை செஸ்: தாய்க்கு ஒரு பாராட்டு!

‘உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள பிரக்ஞானந்தாவின் வெற்றிக்கு, அவரது பெருமைமிக்க தாயாருக்குத்தான் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்”என இந்தோனேசியவை சேர்ந்த பிரபல செஸ் வீராங்கனை ஐரின் சுகந்தர் நெகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உலகக் கோப்பை செஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் டை பிரேக்கரில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

10வது உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்ஸனை இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா எதிர்கொள்ள உள்ளார்.

இந்த நிலையில், பிரக்ஞானந்தாவின் தாயாருடன் செல்பி எடுத்துக் கொண்ட இந்தோனேசிய வீராங்கனை அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‘’ உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள பிரக்ஞானந்தாவிற்கு எனது வாழ்த்துக்கள். ஆனால் அவரின் பெருமைமிக்க தாயாருக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும், ஏனெனில் அவர் இல்லாமல் இது எதுவுமே நடந்திருக்காது” என அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com