இளவேனில் வாலறிவன்
இளவேனில் வாலறிவன்

தமிழ்நாட்டின் இளவேனில் சர்வதேச துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்றார்!

பிரேசிலில் நடைபெற்றுவரும் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழ்நாட்டின் இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இந்தப் போட்டியில் இந்தியா பெற்றுள்ள முதல் தங்கம் இதுவாகும்.

பிரேசிலின் தலைநகரம் ரியோ டி ஜெனிராவில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், சனியன்று முடிவடைந்த இரவுச் சுற்றுவரை, இளவேனில் மொத்தம் 252.2 புள்ளிகளைப் பெற்றார். இதன் மூலம் அவர் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

பிரான்சின் ஓசேனி முல்லர் 251.9 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் வந்தார்.

மொத்தம் 229 புள்ளிகள் பெற்ற சீன நாட்டின் சியால் சாங் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

இந்தியாவின் ஒலிம்பிக் வாகையாளரான இளவேனில் வாலறிவன், இரண்டாவது முறையாக இங்கு தங்கம் வென்றுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டில் ரியோடி ஜெனிராவில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியிலும் தங்கம் வென்றிருந்தார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com