வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஷுப்மன் கில், துருவ் ஜூரெல்
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஷுப்மன் கில், துருவ் ஜூரெல்

சுற்றி சுழன்ற பிட்ச்! தட்டித்தூக்கிய கில், ஜுரெல்

இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3 - 1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கடந்த 23ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 46 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2ஆவது இன்னிங்ஸில் இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்களைக் கைப்பற்றி இங்கிலாந்து அணியின் சரிவுக்குக் காரணமானார். குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது.

தொட்டக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் 37, ரோகித் சர்மா 55 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து ஆட வந்த ரஜத் படிதார் 0, ஜடேஜா 4 ரன்கள், சர்ஃப்ராஸ் கான் 0 என அடுத்தடுத்து இந்திய அணி விக்கெட்களை இழந்தது. என்றாலும், சுப்மன் கில், அறிமுக வீரர் துருவ் ஜூரெல் உடன் இணைந்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு நோக்கி அழைத்து சென்றார். இருவரும் பொறுப்பாக விளையாடி வெற்றிக்கு வழிவகுத்தனர்.

இறுதியில், 61 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. ஷுப்மன் கில் 52 ரன்கள், துருவ் ஜூரெல் 39 ரன்கள் எடுத்திருந்தனர்.

நடப்பு டெஸ்ட் தொடரில் இந்தியா பெறும் மூன்றாவது வெற்றி இதுவாகும். இதன்மூலம் 5 போட்டிகள் டெஸ்ட் தொடரை 3 - 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

அதேபோல், தன்னுடைய அறிமுக டெஸ்ட் தொடரிலேயே ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார் இந்திய அணியின் இளம் வீரர் துருவ் ஜூரெல்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com