ரவுண்ட்ஆப் 16 சுற்றுக்கு முன்னேறிய எகிப்து, அர்ஜெண்டினா, கொலம்பியா அணிகள்!

Argentina player Lionel messi
அர்ஜெண்டினா வீரர் மெஸ்சி
Published on

உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியில் ரவுண்ட் ஆப் 32 சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, எகிப்து அணிகள் மோதின.

இரு அணிகளும் நிர்ணயிக்கப்பட்ட போட்டி நேரம், கூடுதல் நேர முடிவில் 1-1 என்ற சமநிலையில் இருந்ததால், பெனால்டிக்குச் சென்றது. பெனால்டி ஷூட் அவுட்டில் எகிப்து அணி 4-2 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக உலகக் கோப்பை நாக்அவுட் சுற்றை வெற்றிகரமாகக் கடந்தது.

அர்ஜெண்டினா, கேப் வெர்டே அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா அணி ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியது.

கடுமையாகப் போராடிய கேப் வெர்டே அணி,  இரண்டு முறைகLள் சமநிலையை எட்டியபோதும், கூடுதல் நேரத்தின் இறுதியில் அர்ஜெண்டினாவின் லிசாண்ட்ரோ மார்டினஸ் கோல் அடித்து வெற்றியை உறுதிசெய்தார்.

3-2 என்ற கோல் கணக்கில் கேப் வெர்டே அணியை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி போட்டியை வென்றது.

மற்றொரு போட்டியில் கொலம்பியா, கானா அணிகள் மோதின. இதில் கொலம்பியா அணி 1-0 என்ற புள்ளிக்கணக்கில் கானாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது.

இரு அணிகளும் போட்டியின் தொடக்கம் முதலே கோல் அடிக்கும் முனைப்புடன் விளையாடின. இருப்பினும், கொலம்பியா அணி அடித்த ஒரு கோலே வெற்றியைத் தீர்மானித்தது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com