உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியின் முதல் அரையிறுதி போட்டியில் பிரான்ஸ், ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் ஸ்பெயின் அணி, பிரான்ஸ் அணியை வீழ்த்தியது.
டல்லாஸ் நகரில் இந்த அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. போட்டி தொடங்கிய 22ஆவது நிமிடத்திலேயே ஸ்பெயின் அணியின் வீரர் ஒயர்சபால், தன் அணிக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார்.
இதனால், முதல் பாதி போட்டியில் 1-0 என்ற புள்ளிக்கணக்கில் ஸ்பெயின் அணி முன்னிலை பெற்றது.
பிரான்ஸ் அணி கடுமையாக முயன்றும், முதல் பாதி போட்டியில் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை.
பின்னர், இரண்டாம் பாதி போட்டியின் 58ஆவது நிமிடத்தில் பெட்ரோ போரோ கோல் அடித்து ஸ்பெயின் அணியை மேலும் முன்னிலைக்குக் கொண்டுவந்தார்.
போட்டியின் இறுதியில், 2-0 என்ற புள்ளிக்கணக்கில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
கடந்த 2010ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் அணி, 16 ஆண்டுகளுக்குப் பிறகே இந்த ஆண்டுதான் அரையிறுதிக்கே வரமுடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.